சுடச்சுட

  

  ஆயுதங்களுடன் ராம நவமி ஊர்வலம்: பாஜகவினருக்கு மம்தா எச்சரிக்கை

  By DIN  |   Published on : 07th April 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராக நவமி ஊர்வலத்தில் ஆயுதங்களுடன் பங்கேற்ற பாஜக தலைவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
  மாநிலம் முழுவதும் பாஜக தலைவர்கள் புதன்கிழமை நடத்திய ராம நவமி ஊர்வலத்தில், வாள் முதலான ஆயுதங்களை ஏந்தி வந்தனர். வங்கக் கலாசாரம் அறியாத அவர்கள், பிற சமூகத்தினரின் மனதில் அச்சத்தை விதைப்பதற்காக அவ்வாறு ஆயுதம் ஏந்தி வந்தனர்.
  ராம நவமியில் துர்கா தேவிக்கு ராமபிரான் பூக்களால் அர்ச்சனை செய்தார்; வாள்களைக் கொண்டு அல்ல. ராமர் கலவரத்தைத் தூண்டுவதன்மூலம் எந்த அரக்கனையும் அழிக்கவில்லை. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து இதுபோல் ஆயுதங்களுடன் ஊர்வலம் நடத்தினால் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai