சுடச்சுட

  

  இந்தியா - வங்கதேசம் இடையே தீஸ்தா நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?

  By DIN  |   Published on : 07th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.7) வருகை தருவதையொட்டி, இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் தீஸ்தா நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
  மேற்கு வங்கத்தில் பாயும் தீஸ்தா நதியை வங்கதேசத்துடன் பகிர்ந்து கொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் நீண்டகாலமாக கையெழுத்திடப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
  தீஸ்தா நதியை வங்கதேசத்துடன் பகிர்ந்து கொண்டால், மேற்கு வங்க மக்களின் நலன் பாதிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
  இதன் காரணமாக, தீஸ்தா ஒப்பந்தம் கையெழுத்தாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
  குறிப்பாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2011-ஆம் ஆண்டில் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்திலேயே, தீஸ்தா நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதாக இருந்தது.
  ஆனால், மம்தா பானர்ஜியின் கடும் எதிர்ப்பு காரணமாக கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது தவிர்க்கப்பட்டது.
  இந்நிலையில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகைத் தருகிறார். இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.
  எனவே, அவரது வருகையையொட்டி தீஸ்தா ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தாமல், தீஸ்தா ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு விரும்பவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai