சுடச்சுட

  

  ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
  பாஜக ஆண்டுவிழாவையொட்டி, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
  பாஜக நிறுவப்பட்ட தினமான இந்த நாளில், இந்தியா முழுவதிலும் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  சமூகத்துக்கு சேவையாற்றுவதற்காக, தங்களது கடின உழைப்பின் மூலம் பாஜகவை அதன் தொண்டர்கள் கட்டமைத்துள்ளனர்.
  இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, பல்வேறு சமூகத்தினர் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது பெருமை அளிக்கிறது. நாட்டின் வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai