சுடச்சுட

  

  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறும்: சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கை

  By DIN  |   Published on : 07th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sushma

  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை விரைவில் பெறும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பதிலில் கூறியதாவது:
  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உண்டு.
  ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்திலுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ஆகிய 4 நாடுகள் இந்தியாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. மற்றொரு உறுப்பு நாடான சீனா, இதற்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
  இந்த முறை இல்லை என்றாலும், அடுத்த முறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை நிச்சயம் பெறும் என்று நம்புகிறேன்.
  ஏற்கெனவே, நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள், உரிமைகள், வீட்டோவைப் பயன்படுத்தும் அதிகாரம் உள்ளிட்டவற்றைப் புதிதாக உறுப்பினர் அந்தஸ்து பெறும் நாடுகளுக்கும் வழங்க வேண்டும். இதில் பழைய உறுப்பினர், புதிய உறுப்பினர் என்று பாகுபாடு பார்க்கக் கூடாது.
  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகள் மட்டுமல்லாது தாற்காலிக உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது.
  இதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்து வருகிறது என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai