சுடச்சுட

  

  சமாஜவாதி கட்சியை முலாயமிடம் அகிலேஷ் ஒப்படைக்க வேண்டும்

  By DIN  |   Published on : 07th April 2017 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Aparna

  சமாஜவாதி கட்சியின் தலைமைப் பதவியை அதனுடைய நிறுவனர் முலாயம் சிங் யாதவிடம் அகிலேஷ் யாதவ் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று முலாயம் சிங்கின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பின், சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவர் பதவியை முலாயம் சிங் யாதவிடம் திரும்ப ஒப்படைப்பேன் என்று அகிலேஷ் யாதவ் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். அவர், அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்.
  கட்சியில் தற்போது முலாயம் சிங் யாதவ் நடத்தப்படும் விதம் வேதனையளிப்பதாக உள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. எனினும், எங்களுடைய குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
  யோகிக்குப் பாராட்டு: உத்தரப் பிரதேசத்தில் சட்ட விரோதமாகச் செயல்படும் பசுவதைக் கூடங்களுக்கு எதிராக முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.
  எனினும், இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்போருக்கு அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.
  ஆதித்யநாத்தின் ஆட்சி குறித்து, போதிய அவகாசத்துக்குப் பின்பே முடிவுக்கு வர முடியும் என்றார் அபர்ணா யாதவ்.
  முலாயம் சிங் யாதவின் வளர்ப்பு மகன் பிரதீக் யாதவின் மனைவிதான் அபர்ணா யாதவ். இவர் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் லக்னௌ கன்டோன்மெண்ட் தொகுதியில் சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். எனினும், பாஜகவின் ரீட்டா பகுகுணாவிடம் அவர் தோல்வியடைந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai