சுடச்சுட

  

  சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மதகுரு இந்தியாவுக்கு நாடு கடத்தல்

  By DIN  |   Published on : 07th April 2017 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிங்கப்பூரில் பிரசங்கத்தின்போது யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த முஸ்லிம் மதகுரு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
  இந்தியாவைச் சேர்ந்தவர் நல்லா முகமது அப்துல் ஜமீல் (46). இவர், சிங்கப்பூரில் மதபோதனைகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில், அங்கு அவர் ஆற்றிய பிரசங்கத்தில் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே, அவர் கடந்த வாரம் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
  இதனிடையே மதம், இன ரீதியாக பொதுமக்களிடையே பகைமையை வளர்த்ததாகக் கூறி அவருக்கு 3,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.94 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
  இந்நிலையில், நல்லா முகமது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கடந்த 3-ஆம் தேதி அறிவித்தது.
  இதையடுத்து, நல்லா முகமது சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை புதன்கிழமை சந்தித்தார். அப்போது, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டதற்காக முகமதுவுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், நல்லா முகமது வியாழக்கிழமை நாடு கடத்தப்படுவார் என்று சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் 'தி ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
  இதனிடையே, இந்த விவகாரத்தின் மூலம் தாம் விலை மதிப்பில்லாத பாடத்தைக் கற்றுள்ளதாக நல்லா முகமது தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai