சுடச்சுட

  

  சிறார் ஆணைய பணியிடங்களை நிரப்பாத மாநிலங்களுக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

  By DIN  |   Published on : 07th April 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாநில சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பணியிடங்களை நிரப்பாத 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் தலா ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
  சிறார் உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறார் உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து முன்பு கேள்வி எழுப்பியிருந்தது. இதில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறார் உரிமை ஆணையத்தின் பணியிடங்கள் நிரப்பாமல் இருப்பது தெரியவந்தது.
  இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வியாழக்கிழமை மீண்டும் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 'சிறார் உரிமைகள் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்பால் உள்ள மாநில அரசுகள் சிறார் உரிமை விதிகளை மீறிவிட்டன. எனவே, அந்த மாநிலங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.
  தமிழகம், அஸ்ஸாம், கோவா, பிகார், குஜராத், கேரளம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும், சண்டீகர், தில்லி ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் இவ்வாறு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai