சுடச்சுட

  

  ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கின், பதாலிக் செக்டாரில் உள்ள ராணுவ நிலை ஏற்பட்ட பனிச் சரிவுகளில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.

  இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கிய 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாயமான வீரரை தேடும் பணியில் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா, பந்திபோரா, கார்கில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai