சுடச்சுட

  

  ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

  By DIN  |   Published on : 07th April 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parliamentofindia

  சரக்கு - சேவை வரி சட்டத்தை அமலாக்க வகை செய்யும் நான்கு துணை மசோதாக்கள் மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவேறின.
  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதையடுத்து வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி மசோதா நாடு முழுவதும் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
  ஒரே சீரான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து அந்த மசோதா, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  இந்நிலையில், ஜிஎஸ்டி சட்டத்தை அமலாக்குவதற்கு மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி), மாநில இழப்பீட்டு ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி ஆகிய துணை மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
  அந்த நான்கு துணை மசோதாக்களும் கடந்த மாதம் 29-ஆம் தேதி மக்களவையில் நிறைவேறின. அதன் பிறகு, மாநிலங்களையின் ஒப்புதலுக்காக அவை அனுப்பப்பட்டன. அவற்றின் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற அந்த விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். இறுதியில் விவாதத்துக்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:
  நாடு முழுவதும் ஒரே மாதிரியான மறைமுக வரி விதிப்பை மேற்கொள்ள வகை செய்யும் ஜிஎஸ்டி சட்டத்தால் பணவீக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பில்லை. இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டால் மாநிலவாரியாக வரி விதிப்பில் இருக்கும் வேறுபாடுகள் களையப்பட்டு ஒரே மாதிரியான விலை நிர்ணயம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும்.
  இந்த ஜிஎஸ்டி சட்டத்துக்கு இதற்கு முந்தைய அரசுகளும் பங்களிப்பை நல்கியுள்ளன. எனவே, இதற்கு தனிப்பட்ட முறையில் எவரும் உரிமை கோர முடியாது என்றார் அவர்.
  இதைத்தொடர்ந்து. ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
  மக்களவையில் சட்டத் திருத்தம்: இதனிடையே, பெட்ரோலியப் பொருள்களுக்கான கலால் வரி விதிப்பை வழக்கம்போல தொடர்வதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  மேலும், சில பொருள்களுக்கு விதிக்கப்பட்டு வரும் கூடுதல் வரியை ரத்து செய்வது தொடர்பான சட்டத் திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai