சுடச்சுட

    

    தில்லி ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற அய்யாகண்ணு கைது

    By DIN  |   Published on : 07th April 2017 04:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    farmers


    புது தில்லி: தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்றதால், அய்யாகண்ணு கைது செய்யப்பட்டார்.

    தில்லியில் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த நாடாளுமன்றம் மற்றும் ரிசர்வ் வங்கி கட்டங்களை முற்றுகையிட முயன்றதால், விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு உட்பட 15 விவசாயிகளை தில்லி போலிஸ் கைது செய்தது.

    பிறகு, அய்யாகண்ணுவுடன் போராடிய மற்ற 15 தமிழக விவசாயிகளையும் விடுவித்தது தில்லி போலிஸ். அவர்கள் அனைவரும் தில்லி ஜந்தர் மந்தரில் இறக்கிவிடப்பட்டனர்.

    ஆனால், அய்யாகண்ணுவை கைது செய்த நாடாளுமன்ற வீதி காவல்நிலை போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai