சுடச்சுட

  

  தென்னிந்தியாவில் உள்ள கருப்பு மக்களோடு வாழும் நாங்களா நிற வெறியர்கள்? பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு!

  By DIN  |   Published on : 07th April 2017 04:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tharun_vijay

   

  புதுதில்லி: தென்னிந்தியாவில் உள்ள கருப்பு மக்களோடு சேர்ந்து வாழும் நாங்களா நிற வெறியர்கள்? என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ள, பாஜக கட்சியின் உத்தரகாண்ட்  எம்.பி தருண் விஜயின் பேச்சால் சர்ச்சை வெடித்துள்ளது.

  சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் தலைநகர் தில்லியின் அருகே உள்ள நொய்டா பகுதியில், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வருத்தம் தெரிவித்ததுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் தலைமையானது இந்த தாக்குதல்களை 'இனவெறி தாக்குதல்' என்று கடுமையாக விமர்சித்திருந்தது.

  இது தொடர்பாக மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் அல் ஜஸீரா தொலைக்காட்சியில் பாஜக கட்சியின் உத்தரகாண்ட்  எம்.பி தருண் விஜய ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் இந்தியர்கள் நிறவெறியர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'நாங்கள் நிற வெறியர்களாக இருந்தால், எப்படி தென் இந்தியா முழுவதும் உள்ள ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் தமிழ்நாட்டு மக்களோடு வாழ முடியும்?, எங்களை சுற்றி கருப்பு மனிதர்கள் இருக்கிறார்கள்' என்று பதில் அளித்திருந்தார்.

  அவரது இந்த பேட்டியின் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு அவருக்கு எதிராக கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்தன.

  இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், 'நமது நாட்டின் பல்வேறு பாகங்களில் பல்வேறு விதமான மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே நிற வேற்றுமை பார்க்கப்படுவதில்லை. இதைதான் நான் எனது பேச்சில் கூற விரும்பினேன். ஆனால் நான் கூற விரும்பியதை முழுமையாக  தெரியப்படுத்தவில்லை. எனது பேச்சின் காரணமாக வருத்தமடைந்த அனைவருக்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தருண் விஜய் கூறி இருக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai