சுடச்சுட

  

  நண்பருக்கு கத்திக் குத்து: "பழிதீர்த்ததாக' முகநூலில் பதிவிட்டவருக்கு போலீஸ் வலை

  By புதுதில்லி  |   Published on : 07th April 2017 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரோஹிணியில் தீரஜ் (20) என்பவரை தாக்கிய மூவர், கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் ஒருவர் "பழிதீர்த்ததாக' என்று முகநூலில் பதிவிட்டார். அவருடன் சேர்த்து மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

  இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட தீரஜும், அரவிந்த் சௌதரியும் முன்பு நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலையெடுத்து, போலீஸில் பரஸ்பரம் புகார் அளித்திருந்தனர்.

  இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அரவிந்த் சௌதரி தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து தீரஜை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த தீரஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

  பின்னர் அரவிந்த் சௌதரி தனது முகநூல் பக்கத்தில் "நான் பழிதீர்த்துவிட்டேன்' என்று பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தீரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் அரவிந்த் சௌதரி, அவரது இரண்டு நண்பர்களையும் தேடி வருகிறோம்' என்று போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai