சுடச்சுட

  

  நீக்கப்பட்ட தடை: இனி சிறகு விரித்து பறக்கலாம் சிவசேனா எம்.பி!

  By DIN  |   Published on : 07th April 2017 04:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gaikwad

   

  புதுதில்லி: ஏர் இந்தியா நிறுவன மேலாளர் ஒருவரை தனது காலணியால் தாக்கிய விவகாரத்தில் சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டதால் அவர் இனி  மீண்டும் விமானத்தில் பயணம் செய்யாலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல புனே விமான நிலையத்துக்கு வந்தார். அவர் கையில் ‘பிசினஸ்’ வகுப்பு டிக்கெட்   வைத்திருந்தார். ஆனால் அவர் பயணம் செய்வதற்கு ‘எகனாமி’ வகுப்பு இருக்கைகள் மட்டுமே வடிவமைக்கப்பட்ட விமானம் மட்டுமே இருந்தது. இதனால் அவர் எரிச்சலாகி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இறங்கும் பொழுது  விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். சமாதானம் செய்ய முயன்ற ஏர் இந்தியா மேலாளர் சுகுமார் (வயது 60) என்பவரை கெய்க்வாட் கடுமையாக தாக்கி தனது காலணியால் அடித்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு சிவசேனா கட்சித்தலைமையும் அவருக்கு உத்தரவிட்டது. அவரது செயலின் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் கெய்க்வாட் எம்.பி.யை தனது விமானத்தில் அனுமதிக்க தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. ஏர் இந்தியா நிறுவன உத்தரவை பின்பற்றி நாட்டின் அனைத்து விமான நிறுவனங்களும்  அவருக்கு தடை உத்தரவை அமல்படுத்தின.

  இந்த விவகாரமானது நாடாளுமன்றத்திலும் புயலைக் கிளப்பியது. கெய்க்வாடின் தடையை நீக்க கோரி மத்திய விமான போக்குவரத்து துறைஅமைச்சர் கஜபதி ராஜுவை சிவசேனா எம்.பிக்கள் முற்றுகையிட்டு குரல் எழுப்பினர். ஆனால் முறையாக மன்னிப்பு தெரிவித்தால் மட்டுமே அவர் மீதான தடைநீக்கப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்து விட்டார்.

  இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவன மேலாளரை தாக்கியதற்கு வருத்தம் தெரிவித்து ரவீந்திர கெய்க்வாட் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து துறை கடிதம் எழுதியது. அதன் தொடர்ச்சியாக சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கபப்ட்டிருந்த தடையை நீக்கி, தற்பொழுது ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai