சுடச்சுட

  
  smritiIrani

  நெசவாளர்கள் தங்களுடைய பழைய தறிகளை புதிதாக மாற்றுவதற்காக மத்திய அரசு 90 சதவீத மானியம் வழங்கும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
  மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற பூஜ்ய நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், கேரள மாநிலம், கண்ணூர் தொகுதி எம்.பி.யுமான பி.கே.ஸ்ரீமதி அந்த மாநிலத்தில் கைத்தறித் தொழிலில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.
  இதற்குப் பதிலளித்து அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: நெசவாளர்கள் தங்களுடைய பழைய தறிகளைக் கொடுத்துவிட்டு புதிதாக தறிகளை வாங்கும்போது, அதன் மொத்த தொகையில் 90 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும்.
  மேலும், நெசவாளர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக பிரத்யேக தொலைபேசிச் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
  கண்ணூர் தொகுதியில் கைத்தறித் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன் என்றார் ஸ்மிருதி இரானி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai