சுடச்சுட

  

  பசுப் பாதுகாவலர்கள் தாக்கி ஒருவர் சாவு: ராஜஸ்தான் அரசுக்கு ராகுல் கண்டனம்

  By DIN  |   Published on : 07th April 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜஸ்தானில் பசுப் பாதுகாவலர்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அந்த மாநில அரசுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
  ராஜஸ்தானின் அல்வர் மாவட்டத்தில் பசுப் பாதுகாவலர்கள் கொடூரமாகத் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதையே காட்டுகிறது. மாநில அரசு தனது பொறுப்பில் இருந்து விலகி, வன்முறைக் கும்பல் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதித்திருப்பதால், இதுபோன்றசம்பவங்கள் நிகழ்கின்றன.
  இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது ராஜஸ்தான் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு சரியான சிந்தனை கொண்ட இந்தியர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  ஜெய்ப்பூரில் இருந்து ஹரியாணா மாநிலத்துக்கு பசுக்களை வேனில் கடத்திச் சென்றதாக, அல்வர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை பசுப் பாதுகாவலர்கள் கடந்த சனிக்கிழமை தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில், பெஹ்லு கான் (55) என்பவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai