சுடச்சுட

    

    பணியிடங்களில் பாலியல் கொடுமை: பெண்களுக்கு 3 மாதம் ஊதிய விடுப்பு

    By DIN  |   Published on : 07th April 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளானால் அவர்களுக்கு 90 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துப் பேசியதாவது: பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
    அரசு அலுவலகங்களில் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால், அதுதொடர்பான விசாரணை நடைபெறும் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 90 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும்.
    இந்த விடுமுறையானது, வழக்கமான ஆண்டு விடுப்புடன் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. ஊதியப் பிடித்தம் இல்லாத பிரத்யேக விடுப்பாகவே இது கருதப்படும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai