சுடச்சுட

  

  புகைப் பழக்கத்தால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா: ஆய்வில் தகவல்

  By DIN  |   Published on : 07th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலக அளவில் புகைப் பழக்கத்தால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் முதல் 4 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  உலக அளவில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக 'தி லான்செட்' என்னும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  கடந்த 2015-இல் உலக அளவில் நிகழ்ந்த சுமார் 64 லட்சம் உயிரிழப்புகளில் 11 சதவீதத்துக்கும் மேற்பட்டவை புகை பிடிக்கும் பழக்கத்தால் உண்டானவையாகும்.
  புகைப் பழக்கத்தால் உயிரிழந்தவர்களில் சுமார் 52.2 சதவீதம் பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷியா ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  உலகில் புகை பிடிப்பவர்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 112 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.
  கடந்த 2015-இல் உலக அளவில் புகைப் பழக்கமுள்ள ஆண்களில் சுமார் 51.4 சதவீதம் பேர் சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளில் வசிக்கின்றனர்.
  அதேபோல், உலக அளவில் புகைப் பழக்கமுள்ள பெண்களில் சுமார் 27.3 சதவீதம் பேர் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளில் வசிக்கின்றனர்.
  இளம் வயதில் மரணம் மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்துபோதல் ஆகியவற்றின் முக்கிய காரணகர்த்தாவாக மூன்றாம் இடத்தில் இருந்த புகைப் பழக்கம் தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
  உலக அளவில் புகைப் பழக்கத்தால் கடந்த 2005-இல் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2015-இல் 4.7 சதவீதம் கூடுதல் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
  கடந்த 1990-இல் உலக அளவில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 87.04 கோடியாக இருந்தது. கடந்த 2015-இல் இந்த எண்ணிக்கை சுமார் 93.31 கோடியாக உயர்ந்தது.
  உலக அளவில் புகைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல் 3 நாடுகளாக பாகிஸ்தான், பனாமா, இந்தியா ஆகியவை திகழ்கின்றன.
  இருந்தபோதிலும், இந்தியாவில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai