சுடச்சுட

    

    மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் சுயக்கட்டுப்பாடு தேவை: யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 07th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yogiAdity

    மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளுக்கு மாற்றுவதற்கு எதிரான போராட்டங்களின்போது, பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு செய்தித்தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளுக்கு அருகே மூடப்படும் மதுக்கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இத்தகைய போராட்டங்களின்போது பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
    மக்களின் உணர்வுகளை மாநில அரசு மதிப்பதாகவும், யாரும் சட்டம், ஒழுங்கை தங்கள் கைககளில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கோரினார்.
    மேலும், மதுக்கடைகளை அகற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு முழுமையாகச் செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக முதல்வர் கூறினார் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai