சுடச்சுட

  

  மாட்டுவண்டி பந்தயத்தை மீண்டும் தொடங்க மகாராஷ்டிர பேரவையில் சட்டம் நிறைவேற்றம்

  By DIN  |   Published on : 07th April 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தடை செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டி பந்தயத்தை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சட்டத் திருத்த மசோதா வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
  இந்த சட்டத் திருத்த மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  மாட்டுவண்டி பந்தயத்தின்போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி அதனை நடத்துவதற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த மாநில அரசு தடை விதித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஆதரவாக சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, மாட்டுவண்டி பந்தயத்தை நடத்துவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
  இந்நிலையில், அந்தப் பந்தயத்தை மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அந்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மாட்டுவண்டி பந்தயத்தை நடத்துபவர்கள் விதிமுறைகளை மீறும்பட்சத்தில் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
  மகாராஷ்டிரத்தில் கிராமங்களில் பாரம்பரியமாக நடைபெற்றுவந்த மாட்டுவண்டி பந்தயம் மீண்டும் நடைபெற உள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai