சுடச்சுட

  

  மோதல் சூழலை உருவாக்க ஹிந்துத்துவ அமைப்புகள் முயற்சி: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 07th April 2017 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டில் மோதல் சூழலை உருவாக்க ஹிந்துத்துவ அமைப்புகள் முயன்று வருகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
  இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம், அல்வரில் பசுப் பாதுகாவலர்கள் தாக்கியதில் முஸ்லிம் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்துவதன் மூலம், பாஜகவின் சார்பு அமைப்புகளான ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விசுவ ஹிந்து பரிஷத் ஆகியவை நாட்டில் மோதல் சூழலை உருவாக்க முயன்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களால், மக்கள் அமைதியிழந்து உள்ளனர்.
  ஹிந்துத்துவ அமைப்புகளின் அராஜகப் போக்கை சாமானிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எடுத்துரைக்கும் என்றார் அவர்.
  இதேபோல், மக்களவையில் வியாழக்கிழமை கார்கே பேசியபோது, அல்வர் சம்பவத்துக்குக் காரணமாக சில ஹிந்துத்துவ அமைப்புகளின் பெயர்களைச் சுட்டிக் காட்டினார். அவரது கருத்தை அவைத் சுமித்ரா மகாஜன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai