சுடச்சுட

  

  ரகசிய விடியோ: 'நாரதா' அதிகாரியிடம் சிபிஐ 5 மணி நேரம் விசாரணை

  By DIN  |   Published on : 07th April 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாக வெளியான ரகசிய விடியோக் காட்சி தொடர்பாக, 'நாரதா நியூஸ்' இணைய தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி மேத்யூ சாமுவேலிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
  தில்லியில் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. நாரதா விடியோ விவகாரத்தில் சாமுவேல் மீது குற்றம் சாட்டப்படவில்லை. இருப்பினும், அவர் ரகசிய நடவடிக்கை மேற்கொண்ட சூழல் குறித்து அறிந்துகொள்வதற்காகவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
  சிபிஐ விசாரணை முடிந்த பிறகு சாமுவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ரகசிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டம் வகுத்தது, எந்தச் சூழலில், எவ்வளவு பணம் கைமாற்றப்பட்டது, பணப் பரிமாற்றம் நடந்த இடங்கள் போன்ற தகவல்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டறிந்தனர்'' என்றார்.
  மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு (2016) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், ரகசிய விடியோ பதிவு நடவடிக்கை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும் என்றும், முதல் கட்ட விசாரணையை 72 மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், சிபிஐ முதல்கட்ட விசாரணையை முடிப்பதற்கான அவகாசம் ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai