சுடச்சுட

  

  ராணுவ அதிகாரிகளுக்கு சௌர்ய சக்ரா விருதுகளை வழங்கினார் பிரணாப்

  By DIN  |   Published on : 07th April 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranap

  மேஜர் ரஜத் சந்திராவுக்கு வீர தீரச் செயல்களை புரிந்ததற்கான சௌர்ய சக்ரா விருதை, தில்லியில் வியாழக்கிழமைநடைபெற்ற விழாவின்போது வழங்கி கௌரவிக்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளுக்கு வீர தீரச் செயல்களைப் புரிந்ததற்கான சௌர்ய சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலில் பங்கேற்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற மேஜர் தீபக் உபாத்யாய், ரஜத் சந்திரா, கேப்டன் ஆசுதோஷ் குமார், பாராசூட் வீரர் அப்துல் கயூம் ஆகியோருக்கு சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.
  பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளின் உடைமைகளில் இருந்த சக்திவாய்ந்த குண்டுகளை கைப்பற்றச் சென்றபோது வீரமரணம் அடைந்த ராணுவ அதிகாரி நிரஞ்சன், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்ட சௌர்ய சக்ரா விருதுகள் அவர்களது குடும்பத்தினரிடம் அளிக்கப்பட்டன.
  மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி டி.விஜய் ரெட்டி, ராஜ்புதனா ரைஃபில்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் ஹனுமன் ராம் சரண் ஆகியோருக்கும் சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது.
  இதுதவிர, கீர்த்தி சக்ரா விருது, யுத்த சேவா பதக்கம் ஆகியவையும் வீரர்களுக்கு வழங்கப்பட்டன.
  ராணுவ உயரதிகாரி லெஃப்டினன் ஜெனரல் ஹரீஷுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai