சுடச்சுட

  

  லோக்பால் நியமன விவகாரம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 07th April 2017 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொறுப்புணர்வுடன் செயல்பட மத்திய அரசுக்கு விருப்பமில்லை, எனவேதான் லோக்பால் உறுப்பினர்களை நியமிக்காமல் உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
  மத்திய அரசில் நடைபெறும் லஞ்சம், ஊழல்களை விசாரிக்க லோக்பால், மாநில அளவில் விசாரணை மேற்கொள்ள லோக் ஆயுக்த ஆகிய அமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டும், லோக்பால் உறுப்பினர்களை நியமிக்காமல் மத்திய அரசும், லோக் ஆயுக்தவை நியமிக்காமல் பல்வேறு மாநில அரசுகளும் காலம் தாழ்த்தி வருகின்றன.
  இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:
  கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போதுவரை லோக்பால் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. பொறுப்புணர்வுடன் செயல்பட மத்திய அரசு விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
  தில்லியில் மூன்று ஆண்டுகளைக் கழித்துவிட்ட பிரதமர் மோடி, இப்போதுவரை லோக்பால் குறித்து எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதற்கு முன்பு 12 ஆண்டுகளாக குஜராத்தில் முதல்வராக இருந்தபோதும் லோக் ஆயுக்தவை அவர் நியமிக்கவில்லை. இதன் மூலம் அவரிடம் உண்மையில்லை என்பதும், மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது என்றார் அவர்.
  லஞ்சம், ஊழலுக்கு எதிரான லோக்பால், லோக் ஆயுக்த ஆகிய அமைப்புகள் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் தானாகவே முன்வந்து விசாரணை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai