சுடச்சுட

  

  வங்கதேசத்தின் குல்னா நகர் - கொல்கத்தா இடையேயான புதிய ரயில் சேவை வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
  இதனை முன்னிட்டு, இந்த புதிய ரயிலுக்கான சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஏப்.8) நடைபெறுகிறது.
  வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகை தருகிறார். ஷேக் ஹசீனாவின் வருகையை ஒட்டி, வங்கதேசத்தின் குல்னா நகரையும், இந்தியாவின் கொல்கத்தாவையும் இணைக்கும் புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  அதன்படி, இந்தப் புதிய ரயிலுக்கான சோதனை ஓட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், ஷேக் ஹசீனாவும் இந்த சோதனை ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைக்கின்றனர்.
  தில்லியிலிருந்து சனிக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் காணொலி முறை மூலமாக இந்த சோதனை ஓட்டத்தை இரு நாட்டுத் தலைவர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஆர்.என். மொஹபத்ரா தெரிவித்தார்.
  சோதனை ஓட்டத்தைத் தொடர்ந்து, வரும் ஜுலை மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
  பூங்கா தெருவுக்கு முஜிபுர் ரஹ்மான் பெயர்: இதனிடையே, தில்லியின் பூங்கா தெருவுக்கு வங்கதேசத்தை உருவாக்கிய ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரு என பெயர் சூட்டப்படவுள்ளது. வங்கதேசப் பிரதமர் ஹசீனா பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai