சுடச்சுட

  

  2019 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: பாஜகவினருக்கு அமித் ஷா அறிவுரை

  By DIN  |   Published on : 07th April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  தீனதயாள் உபாத்யாயவின் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி.

  வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களைத் தேர்தலில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெற்றிவாகை சூட பாஜகவைத் தயார்படுத்த வேண்டும் என்று மாநிலத் தலைவர்களுக்கு கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.
  இதுகுறித்து பாஜக ஆண்டு விழாவையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:
  பாஜக ஆணடு விழாவையொட்டி நாடு முழுவதும் 8 நாள் பிரசார விழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில், கட்சித் தலைமையின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் செயல்பட்டு, நமக்கு பலம் குறைந்த தொகுதிகளில் கட்சியின் செல்வாக்கை வளர்க்க பாஜக எம்.பி.க்கள் பாடுபட வேண்டும்.
  மக்களிடையே பாஜகவின் செல்வாக்கை வளர்ப்பதற்கு, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநிலத்தை கட்சித் தலைவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
  சிறந்த நிர்வாகம், அனைவருக்கும் வளர்ச்சி என்ற நரேந்திர மோடியின் தலைமைப் பாணியைப் பின்பற்றி, மாநிலத் தலைவர்கள் கட்சியை வளர்க்க வேண்டும்.
  சாதி அரசியல், குடும்ப அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகிய மூன்றும்தான் இந்திய அரசியலுக்குப் பிடித்த சாபக்கேடு என்று நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு கூறினார்.
  அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததன்மூலம் அந்த மூன்றுக்கும் மக்கள் மரண அடி கொடுத்தனர். தற்போது உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலிலும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து, சாதி, குடும்ப, வாக்கு வங்கி அரசியலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
  இந்தியாவிலுள்ள 1,600-க்கும் மேற்பட்ட கட்சிகளில், பாஜக மட்டும்தான் தனது கொள்கையின் பலத்தைக் கொண்டு பரவி வருகிறது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்புத் தேர்தலை நடத்தி, உள்கட்சி ஜனநாயகத்தைப் பேணிக் காத்து வருகிறது.
  கடந்த 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது கட்சிக்கு, தற்போது அதிகபட்ச எண்ணிக்கையாக 281 எம்.பி.க்களும், பல்வேறு மாநிலங்களில் 1,398 எம்எல்ஏக்களும் உள்ளனர். 13 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார் அமித் ஷா.

  ஏழைகளுக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும்: பிரதமர்
  புது தில்லி, ஏப். 6: ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாஜக தொடர்ந்து பணியாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
  பாஜக ஆண்டுவிழாவையொட்டி, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
  பாஜக நிறுவப்பட்ட தினமான இந்த நாளில், இந்தியா முழுவதிலும் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  சமூகத்துக்கு சேவையாற்றுவதற்காக, தங்களது கடின உழைப்பின் மூலம் பாஜகவை அதன் தொண்டர்கள் கட்டமைத்துள்ளனர்.
  இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, பல்வேறு சமூகத்தினர் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது பெருமை அளிக்கிறது. நாட்டின் வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai