சுடச்சுட

  

  அதிநவீன ஏவுகணை பாதுகாப்புச் சாதனத்தை இஸ்ரேலிடம் இருந்து வாங்குகிறது இந்தியா: ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

  By DIN  |   Published on : 08th April 2017 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எதிரிநாடுகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வல்லமை கொண்ட நவீன ஏவுகணை பாதுகாப்புச் சாதனத்தை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.
  இதுதொடர்பாக இஸ்ரேல், இந்தியா இடையே சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல், அந்நாட்டைச் சேர்ந்த ரபேல் நிறுவனத்துடன் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், இந்திய ராணுவத்துக்கு தரையில் இருந்து பாய்ந்து சென்று எதிரியின் இடத்தில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் மத்திய ரக நவீன ஏவுகணையை அளிக்கும். இதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலில் பொருத்தக்கூடிய வகையில், நீண்ட தொலைவு வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களையும் அந்நிறுவனம் அளிக்கும். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புத் துறை வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
  அதேநேரத்தில் ரபேல் நிறுவனம், வான் பாதுகாப்புச் சாதனத்துக்கு தேவையான உதிரிபாகங்களை இந்தியாவுக்கு அளிக்கும்.
  முன்னதாக, இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அரசுத் தலைவர்களுடன் மேற்கண்ட ஒப்பந்தங்கள்
  குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai