சுடச்சுட

  

  அமெரிக்கா: முகமூடிக் கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்

  By DIN  |   Published on : 08th April 2017 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அமெரிக்காவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவர், முகமூடி கொள்ளையர்கள் 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த இந்திய இளைஞர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
  அமெரிக்காவின் வாஷிங்டனில் யாகிமா நகரில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்துடன் சேர்ந்திருக்கும் கடையில் கிளார்க்காக விக்ரம் ஜர்யால் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அந்த கடையினுள் முகமூடி அணிந்து கொண்டு 2 பேர் வியாழக்கிழமை புகுந்து கொள்ளையடித்தனர்.
  அப்போது கொள்ளையர்களின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை எடுத்து ஜர்யால் கொடுத்துள்ளார். எனினும், கொள்ளையர்களில் ஒருவர் ஜர்யாலை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.
  இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஜர்யாலை அங்கிருந்தோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
  ஜர்யால் உயிரிழப்பதற்கு முன்பு, காவல்துறை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் கொள்ளையர்களின் தாக்குதல் குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். அதன்பிறகே, அவர் இறந்துள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  முகமூடி நபர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் விடியோ காட்சிகள், அங்கிருக்கும் ரகசிய காமராவில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, கொள்ளையர்கள் 2 பேரை அமெரிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
  பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜர்யால். அமெரிக்காவுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சென்றுள்ளார். இந்தத் தகவலை பிடிஐ செய்தியாளரிடம் பேசிய ஜர்யாலின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
  சுஷ்மா ஸ்வராஜ் இரங்கல்: இந்தச் சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, சுட்டுரை மூலம் ஜர்யாலின் சகோதரர் தெரியப்படுத்தினார். தனது சகோதரரின் உடலை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai