சுடச்சுட

  
  dalailama

  திபெத்திய பெளத்த மதத் துறவி தலாய் லாமா, அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் நகரை வெள்ளிக்கிழமை சென்றடைந்தார். அவருடன் முதல்வர் பெமா காண்டுவும் சென்றுள்ளார்.
  9 நாள் பயணமாக, கடந்த 4-ஆம் தேதி அருணாசலப் பிரதேசத்துக்கு வந்த தலாய் லாமா, முதலில் போம்திலா நகரில் ஆன்மிக உரை நிகழ்த்தினார். பின்னர், மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள திராங் நகரில் 2 நாள்கள் தங்கியிருந்தார்.
  இந்நிலையில், தவாங் நகரை வெள்ளிக்கிழமை சென்றடைந்தார். அவர், கடந்த 4-ஆம் தேதியே தவாங் நகருக்குச் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை நிலவியதால், விமானப் பயணத்தைக் கைவிட்டு, சாலை மார்க்கமாக 550 கி.மீ. பயணம் செய்து, தவாங் நகரைச் சென்றடைந்தார்.
  தவாங் நகரில் சனிக்கிழமை நடைபெறும் மதச் சடங்குகளில் பங்கேற்கும் அவர், அங்குள்ள பெளத்த மடாலயத்தில் 4 நாள்கள் தங்கவுள்ளார். அதன்பிறகு, வரும் 11-ஆம் தேதி அவர் தர்மசாலாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று தவாங் நகர துணை ஆணையர் கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai