சுடச்சுட

  
  SambitPatra

  ஒடிஸாவில் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார்.
  இது தொடர்பாக அவர், புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
  ஒடிஸாவில் வீரநடை போட்டுச் செல்லும் பாஜகவை எவரும் முடக்க இயலாது. நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்த எதிர்பாராத வெற்றி இதன் அறிகுறிதான். உத்தரப் பேரவைத் தேர்தலின்போதும் பாஜக வெல்லாது என்றுதான் அப்போது கூறினர்.
  ஆனால் அனைத்து தேர்தல் கணிப்புகளையும் பொய்யாக்கி அந்த மாநிலத்தில் எதிர்பாராத வகையில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதேபோலத்தான், வரும் 2019 ஒடிஸா பேரவைத் தேர்தலின் முடிவுகளும் இருக்கும்.
  ஒடிஸா மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்பார்க்கின்றனர். வரும் 2019-இல் புதிய ஒடிஸாவை உருவாக்க வேண்டுமெனில் பிரதமரையும் பாஜகவையும் மாநில மக்கள் ஆதரிக்க வேண்டும்.
  பிஜு ஜனதாதளத்தைப் பிளவுபடுத்த பாஜக முயன்று வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. பாஜகவுக்கு படைத்தல் மற்றும் உருவாக்குவதில்தான் நம்பிக்கை இருக்கிறது. உடைப்பது,
  பிளவுபடுத்துவதில் அல்ல.
  நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு சாதகமாக அதிர்வலைகள் காணப்படுகின்றன. உ.பி.யில் பாஜக பெற்ற வெற்றி, மக்கள் மோடியைத்தான் விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
  அதேபோல ஒடிஸாவிலும் மோடியைத்தான் மக்கள் விரும்புகின்றனர். இதுநாள் வரை புறக்கணிக்கப்பட்டு வந்த ஒடிஸா மக்கள் தற்போது பாஜகவைத்தான் மாற்று சக்தியாகப் பார்க்கின்றனர் என்றார் பத்ரா.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai