சுடச்சுட

  

  கேரளத்தில் போலீஸ் காவலில் இளைஞர் சாவு: பாஜக கடையடைப்பு போராட்டம்

  By DIN  |   Published on : 08th April 2017 11:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள மாநிலம், காசர்கோட்டில் போலீஸ் காவலில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதைக் கண்டித்து, காசர்கோட்டில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சனிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
  காசர்கோட்டில் உள்ள பிரிந்தாவயல் பகுதியில் சிலர் மதுபானம் அருந்துவதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. இதனடிப்படையில், போலீஸார் அங்கு சென்றபோது, ஆட்டோ ஓட்டுநர் சந்தீப் உள்ளிட்ட 5 பேர் தப்பியோட முயன்றுள்ளனர். இதில் சந்தீப் மட்டும் மயங்கி விழுந்துள்ளார். மற்றவர்களை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
  எனினும், போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தீப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு அவரை போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தீப் மாரடைப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், போலீஸாரின் சித்ரவதையில் அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களும், நண்பர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
  ஆட்டோ ஓட்டுநர் சந்தீப், பாஜகவின் பிஎம்எஸ் தொழிற்சங்க உறுப்பினர் ஆவார். எனவே, அவரது உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, காசர்கோடு தொகுதியில் பாஜக சார்பில் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai