சுடச்சுட

  
  ravindra-gaikwad

  ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியரை தாக்கிய சம்பவத்துக்காக சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர் மீதான தடை முழுவதும் நீக்கிக் கொள்ளப்படுவதாக இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

  தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 60 வயது மதிப்புள்ள மேலாளர் ஒருவரை இருக்கை ஒதுக்குவது தொடர்பான தகராறின்போது கெய்க்வாட் தனது காலணியால் தாக்கினார். இதையடுத்து, அவர் தங்களது விமானங்களில் பயணிப்பதற்கு ஏர் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் 24-ஆம் தேதி தடை விதித்தது. இதையடுத்து, கெய்க்வாட் மீது ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ ஆகிய 4 விமான நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பும் தடை விதித்தது.
  இதனிடையே, மக்களவையில் அண்மையில் பேசிய கெய்க்வாட் தனது செயலுக்காக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, அவர் மீதான தடையை நீக்கும்படி விமான நிறுவனங்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
  இதையடுத்து, கெய்க்வாட் மீது விதித்த தடையை ஏர் இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை விலக்கிக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பும் தாம் விதித்திருந்த தடையை சனிக்கிழமை திரும்பப் பெற்றது.
  இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "நமது விமான நிறுவனங்கள் சொத்துகள், சக பணியாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவர் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து, கெய்க்வாடை விமானங்களில் பயணிக்க அனுமதிப்பதென்று கூட்டமைப்பில் இருக்கும் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai