சுடச்சுட

    

    செய்தியாளர்களைப் பாதுகாக்க சட்டம்: மகாராஷ்டிர பேரவையில் நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 08th April 2017 02:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்தியாளர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யவும், குறைந்தபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் இயற்றப்பட்டுள்ளது.
    மகாராஷ்டிர செய்தியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் (வன்முறையிலிருந்து பாதுகாப்பது, சேதம், இழப்பு) சட்ட மசோதா-2017, அந்த மாநில சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
    அப்போது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவையில் இல்லை. எனவே, இந்த மசோதா மீது எந்தவொரு விவாதமும் நடத்தப்படாமல் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம், செய்தியாளர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராகவும், ஊடக நிறுவனங்களில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும் பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்ய முடியும். மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ரூ.50ஆயிரம் வரை அபராதமும், 3 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai