சுடச்சுட

  
  farmers1

  கொள்ளிடத்தில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

  தில்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல், திருவோடு ஏந்தி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கொள்ளிடம் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு கொள்ளிடம் ஒன்றிய விவசாய சங்கங்களின் தலைவர் ஏ.சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் வி.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  2015-16ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.25,000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். கடல் நீர் உட்புகாமல் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும். வங்கிகடன் மற்றும் கல்வி கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் போராட்டம் மற்றும் தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் நெற்றியில் நாமமிட்டு, கையில் திருவோடு ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
  இதில், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் இமயவரம்பன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். சனிக்கிழமை காலையில் தொடங்கிய போராட்டம் மாலை வரை நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai