சுடச்சுட

  

  நிதின் கட்கரிக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் பாராட்டு

  By DIN  |   Published on : 08th April 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தன.
  மக்களவையில் 2016-ஆம் ஆண்டைய மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதா மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது நிதின் கட்கரி சிறப்பான பணியை செய்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
  காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் பேசியபோது, சாலைகளில் எதிர்கொள்ளப்படும் முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண தீவிரமாக பணியாற்றும் உண்மையான அமைச்சர் கட்கரி என்றார்.
  பிஜு ஜனதா தள எம்.பி. ததாகத சத்பதி பேசியபோது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடின உழைப்பாளி என்றார். மேலும், நிதின் கட்கரி தனது கவனத்தை ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தின்மீதும் திருப்ப வேண்டும் என்றும், அப்படி செய்தால் புவனேசுவரமும் வளர்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டார். மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி மற்றும் சில எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் நிதின் கட்கரியின் பணிகளுக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
  மல்லிகார்ஜுன கார்கே பேசியபோது, ஆளும் கட்சி எம்.பி.க்கள் வரிசையில் இருக்கைகள் காலியாக இருப்பதை சுட்டிக்காட்டி, முக்கிய மசோதாவை நிதின் கட்கரி அறிமுகப்படுத்தும்போது அவரைப் பாராட்ட ஆளும் கட்சி தரப்பில் யாரும் இல்லை என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai