சுடச்சுட

  

  நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்ற பரிசீலனை: நிதியமைச்சர் அருண் ஜேட்லி

  By DIN  |   Published on : 08th April 2017 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  arunjetly

  நிதியாண்டின் தொடக்கத்தை ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனவரிக்கு மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
  இதுகுறித்து மக்களவையில் வெள்ளிக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து அருண் ஜேட்லி பேசியதாவது:
  வழக்கமாக நிதியாண்டு ஏப்ரல் மாதம் முதலே தொடங்குகிறது. இதனை மாற்றி, ஜனவரி மாதத்தை நிதியாண்டின் தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம் என அரசுக்கு நிதித்துறைக் குழு பரிந்துரைத்துள்ளது.
  இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
  எனினும், நிதியாண்டின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றும் பரிந்துரை தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
  ஆனால், இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்பு அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்க வேண்டியது அவசியம். ஏனெனில், நிதியாண்டை மாற்றியமைப்பது என்பது ஒட்டுமொத்த நாடும் சம்பந்தப்பட்டது ஆகும்.
  எனவே, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளுடனும் ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம். இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால் மட்டுமே இதுதொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார் அருண் ஜேட்லி.
  ரூ.141.13 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல்: நாடு முழுவதும் வருமான வரித்துறையினர், அமலாக்கத் துறையினர் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்ட சோதனையில் இதுவரை ரூ.141.13 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலளித்தபோது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai