சுடச்சுட

    

    நீதி அமைப்பை அழிக்கிறது ஹரியாணா அரசு: உச்ச நீதிமன்றம் கண்டனம்

    By DIN  |   Published on : 08th April 2017 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதி அமைப்பை ஹரியாணா மாநில அரசு அழிக்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
    ஹரியாணா மாநில கூட்டுறவு தொழிலாளர், கட்டுமானக் கூட்டமைப்பு சார்பில் அந்த மாநில உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை எதிர்த்து 5 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
    நீங்கள் நீதி பரிபாலன முறையையே அழிக்க முயற்சிக்கிறீர்கள். வழக்கு தொடர்பாக நீங்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது. ஒரே விஷயத்துக்காக மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவது ஏன்? இதுவரை நீதிமன்றம், குறைதீர்ப்பாயம் என 5 நீதி சார்ந்த அமைப்புகளை அணுகியுள்ளீர்கள்.
    மேல்முறையீடு செய்வதற்கு ஒரு காலவரம்பு என்பது வேண்டாமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹரியாணா மாநில அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் அறிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai