சுடச்சுட

  

  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன: மார்க்சிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 08th April 2017 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசியல் காரணங்களுக்காக தேசத் துரோகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
  இதுதொடர்பாக, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூஜ்ய நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரீட்டாபிரதா பானர்ஜி பேசியதாவது:
  தேசத் துரோக எதிர்ப்புச் சட்டம் மட்டுமல்லாது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் தற்போது தவறான முறையில் பிரயோகிக்கப்படுகிறது.
  குறிப்பாக மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள், மத ரீதியிலான சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக இந்தச் சட்டங்கள் பொறுப்பற்ற முறையிலும், அரசியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
  ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின்பேரில் தேசத் துரோக எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இவ்வாறு செய்வது ஜனநாயகக் கொள்கைகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் மீறுவதற்கு ஒப்பாகும்.
  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில், நீதித் துறை கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளது.
  எனினும், பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான வழக்குகளில் நீதித் துறை கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.
  மாலேகான், அஜ்மீர் தர்கா, சம்ஜௌதா விரைவு ரயில், ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேற்சொன்ன சில வழக்குகளில் தொடர்புடைய அஸீமானந்த் அண்மையில் விடுவிக்கப்பட்டது இதற்கு நல்லதொரு உதாரணமாகும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai