சுடச்சுட

  

  பாஜகவில் சேரப் போவதாக வெளியான தகவலை சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் சிங் யாதவ் மறுத்தார்.
  உத்தரப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்தை சிவ்பால் சிங் அண்மையில் சந்தித்துப் பேசினார். சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் அதிருப்தி நிலவும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றதால், பாஜகவில் அவர் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின.
  இதுகுறித்து மதுராவில் அவர் செய்தியாளரைச் சந்தித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 'மரியாதை நிமித்தமாகவே அவரை சந்தித்துப் பேசினேன். இந்த சந்திப்பின் பின்னணியில் வேறு எந்த காரணமும் கிடையாது. அதேபோல், புதிய கட்சியைத் தோற்றுவிக்கும் எண்ணமும் எனக்கு கிடையாது. ஏனெனில், நான் சமாஜவாதி கட்சியின் உண்மையான வீரர் ஆவேன். கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உத்தரவுப்படி நான் செயல்படுவேன்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai