சுடச்சுட

  

  பிரபலங்களுடன் செல்ஃபி வேண்டாம்: ஆதார் பதிவு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 08th April 2017 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  selfie


  புது தில்லி: ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வரும் பிரபலங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டாம் என்று ஆதார் பதிவு நிறுவன ஊழியர்களுக்கு தேசிய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

  கிரிக்கெட் வீரர் தோனியின் வீட்டுக்குச் சென்று ஆதார் பதிவு செய்த ஊழியர் ஒருவர், அவருடன் செல்ஃபி எடுத்துள்ளார். அதையும் அவரைப் பற்றிய தகவல்கள் அடங்கிய படிவத்தையும் புகைப்படம் எடுத்து இரண்டையும் சமூக தளத்தில் வெளியிட்டார்.

  இதனால், தோனியின் தனிநபர் விவரங்கள் சமூக தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்தே, தேசிய தனித்துவ அடையாள ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

  அதாவது, ஆதார் பதிவு செய்ய வரும் பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர் மீதான அபிமானத்தையும் பணியையும் ஒன்றாக சேர்த்து விட வேண்டாம். இரண்டும் தனித்தனி.

  இந்தியாவில் இதுவரை சுமார் 113 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த தனி நபரின் ரகசியமும் கசியவில்லை. அதே சமயம், இது போன்று பிரபலங்களின் விவரங்களை பதிவு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai