சுடச்சுட

  
  car1

  தில்லியில் சனிக்கிழமை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் உடல் நலம் பாதிக்கப்பட்ட விவசாயி அகிலன்.

  தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் சனிக்கிழமை நான்கு பேருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

  விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சனிக்கிழமை முழு மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், 22 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர்.


  அப்போது, திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த பில்லாபாளையத்தைச் சேர்ந்த அகிலன், துவரங்குறிச்சியைச் சேர்ந்த ஏ.சி. பழனிச்சாமி, தஞ்சாவூர் முருகன், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகிய நான்கு பேருக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல் துறை வாகனம் வரவழைக்கப்பட்டு அவர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  இதில் இருவர் சிகிச்சை முடிந்து போராட்டக் களத்துக்குத் திரும்பினர். இருவர் சிகிச்சை பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

  தில்லியில் சனிக்கிழமை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் உடல் நலம்  பாதிக்கப்பட்ட விவசாயி அகிலன். (வலது) மொட்டையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai