சுடச்சுட

  

  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாருக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
  தில்லியிலும், தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளிலும் உள்ள நிறுவனங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
  மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாரின் நிறுவனங்களுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கும் சில கட்டுமான நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
  ஆனந்த் குமாரின் நிறுவனங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகள், முதலீடுகள், கடன்களின் விவரம் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை அறிவதற்காக, இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக, வருமான வரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
  இதேபோல், தில்லியைச் சேர்ந்த வர்த்தகக் குழுமம் ஒன்றிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். நாட்டிலேயே அதிக அளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் அந்தக் குழுமத்தின் 14 மையங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
  உணவுப் பொருள்களை இணையதளம் வாயிலாக இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்தப் புகாரை அடுத்து, இந்தச் சோதனை நடைபெற்றதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
  இதுதவிர, ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, ரூ.6 கோடியை வங்கியில் டெபாசிட் செய்த மும்பையைச் சேர்ந்த நகைக்கடை அதிபருக்குச் சொந்த
  மான நிறுவனங்கள், ஹைதராபாத்தைச் சேர்ந்த நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்கள் என நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
  சோதனை ஏன்?: நாடு முழுவதும் ரூ.100 கோடி மதிப்புள்ள கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து, முக்கிய நகரங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
  கருப்புப் பணத்தை தாமாக முன்வந்து அறிவிப்பதற்கு அரசு அளித்த அவகாசம், கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, தொடர்ந்து 2-ஆவது நாளாகச் சோதனை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வியாழக்கிழமையும் வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்றது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai