Enable Javscript for better performance
வாக்குப்பதிவை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் 16 லட்சம் தேவை: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் 16 லட்சம் தேவை: மத்திய அரசு

    By DIN  |   Published on : 08th April 2017 12:36 AM  |   அ+அ அ-   |    |  

    தேர்தலில் எவருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளப் பயன்படுத்தப்படும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அதிக அளவில் தேவைப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டுமானால், மேலும் 16 லட்சம் இயந்திரங்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி பதிலளித்துப் பேசியதாவது:
    இரு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
    இதற்காக 16,15,000 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.
    கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 11 முறைகளுக்கும் மேலாக மத்திய அரசிடம் இதுதொடர்பான வலியுறுத்தல்களை தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது.

     

    kattana sevai