சுடச்சுட

  

  கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 48 ராணுவ விமானங்களும், 21 ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியதாகவும், இவ்விபத்துகளில் 79 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே அளித்த பதில்:
  கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 48 ராணுவ விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. ராணுவத்துக்குச் சொந்தமான 21 ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கி நொறுங்கின. இந்த விபத்துகளில் சிக்கி 79 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று சுபாஷ் பாம்ரே தெரிவித்தார்.
  மற்றொரு கேள்விக்கு அவர் அளித்த பதிலில், 'ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது' என்றார்.
  மக்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு, பதுங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் வகை போர் விமானங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai