சுடச்சுட

  

  திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
  பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் வனப்பகுப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 20க்கும் மேற்பட்டோர் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதையடுத்து போலீஸார் துப்பாக்கூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
  மேலும், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 17 செம்மரக்கட்டைகளை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, சிதம்பரம், ராமன், சின்னசாமி மற்றும் ஒரு சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai