சுடச்சுட

  

  இந்தியர் படுகொலை: விசாரணையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு

  By DIN  |   Published on : 09th April 2017 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sushma

  அமெரிக்க பெட்ரோல் விற்பனையகத்தில் பணிபுரிந்த இந்திய இளைஞர், முகமூடிக் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் அந்த நாட்டு அதிகாரிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது: 
  அமெரிக்காவில் விக்ரம் ஜர்யால் என்ற இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான அறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
  26 வயதான அவர், 25 நாள்களுக்கு முன்னர்தான் அமெரிக்கா சென்றார். தனது குடும்ப நண்பர் ஒருவருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அவர் பணியாற்றினார்.
  அந்த பெட்ரோல் நிலையத்துக்கு கடந்த வியாழக்கிழமை முகமூடி அணிந்து வந்த இருவர், விக்ரம் ஜர்யாலிடம் கொள்ளையடித்துவிட்டு, அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார்.
  சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவின் உதவியுடன், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
  வாஷிங்டனில் உள்ள விக்ரம் ஜர்யாலின் உறவினர்களுக்கு, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.
  பின்னணி: அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள யாகிமா நகரில், பெட்ரோல் விற்பனை நிலையத்துடன் இணைந்துள்ள கடையில் விக்ரம் ஜர்யால் பணிபுரிந்து வந்தார். அந்தக் கடைக்கு கடந்த வியாழனன்று முகமூடி அணிந்தபடி வந்த 2 பேர், விற்பனைப் பணத்தைக் கொடுக்குமாறு விக்ரம் ஜர்யாலை மிரட்டினர்.
  மிரட்டலுக்குப் பயந்து பணத்தை எடுத்து ஜர்யால் கொடுத்தும், கொள்ளையர்களில் ஒருவர் ஜர்யாலை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அங்கிருந்து 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர். 
  இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஜர்யாலை அங்கிருந்தோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai