சுடச்சுட

  

  கர்நாடகம்: 2 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்

  By DIN  |   Published on : 09th April 2017 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக மாநிலத்தில் நஞ்சன்கூடு, குண்டல்பேட் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9) நடைபெறுகிறது. இதற்காக இரு தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இருந்து தன்னை கைவிட்டதால் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சீனிவாஸ் பிரசாத், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததோடு, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார். இதையடுத்து, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதேபோல, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த மகாதேவ பிரசாத், திடீரென மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, நஞ்சன்கூடு, குண்டல்பேட் தொகுதிகள் காலியாக இருந்தன.
  இந்நிலையில், மைசூரு மாவட்டத்தின் நஞ்சன்கூடு, சாமராஜ்நகர் மாவட்டத்தின் குண்டல்பேட் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai