சுடச்சுட

  

  போலியான அழைப்பு மையங்கள் (கால் சென்டர்கள்) மூலம் அமெரிக்கர்களிடமிருந்து 30 கோடி டாலர் வரை (சுமார் ரூ.1,900 கோடி) மோசடி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி சாரக் தாக்கரை, தாணே போலீஸார் மும்பையில் கைது செய்தனர்.
  துபையில் தலைமறைவாக இருந்த அவர், இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையம் வந்திறங்கிய அவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
  கடந்த 2013-ஆம் ஆண்டு முதல், மாகாராஷ்டிர மாநிலம், தாணே நகரில் சில அழைப்பு மைய ஊழியர்கள் தொலைபேசி மூலம் அமெரிக்கர்களை அழைத்து, அவர்களிடம் அமெரிக்க அரசுத் துறை அதிகாரிகளைப் போல் போலியாக பேசி, இல்லாத நிலுவைத் தொகை, வரி பாக்கியை இருப்பதாகக் கூறி, கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர்.
  இந்த வகையில், 15,000 அமெரிக்கர்களிடம் 30 கோடி டாலர் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக அமெரிக்க நீதித் துறை 61 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. 
  மோசடி குறித்த தகவல் கிடைத்தவுடன், தாணேவிலுள்ள அழைப்பு மையங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிரடி சோதனை நடத்திய போலீஸார், 5 அழைப்பு மையங்களை இழுத்து மூடினர். மேலும், இதுதொடர்பாக மையங்களின் 70-க்கும் மேற்பட்ட அழைப்பு மைய அதிகாரிகள், 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கைது செய்தனர்.
  எனினும், மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட "ஷாக்கி' எனப்படும் சாகர் தாக்கர் (24) துபைக்குத் தப்பிச் சென்று, தலைமறைவாக இருந்து வந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai