சுடச்சுட

  

  கேரள முதல்வரைக் கொலை செய்ய முகநூலில் அழைப்பு: மாணவர் கைது

  By DIN  |   Published on : 09th April 2017 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கொலை செய்வதற்கு சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

  கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் ராகேஷ் (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொறியியல் மாணவரான இவர், ஃபேஸ்புக் (முகநூல்) சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய செய்தியொன்றை பதிவிட்டிருந்தார்.
  அதில், அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனைக் கொலை செய்யுமாறு சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
  இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், ராகேஷை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai