சுடச்சுட

  

  சொத்துத் தகராறு வழக்கு: "வாட்ஸ் - அப்' மூலம் அழைப்பாணை அனுப்பிய ஹரியாணா அதிகாரி

  By DIN  |   Published on : 09th April 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஹரியாணா நிதித் துறை விசாரணை ஆணையர், அதில் தொடர்புடைய பிரதிவாதி ஒருவருக்கு "வாட்ஸ் - அப்' செயலி மூலம் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.
  நாட்டிலேயே சமூக வலைதளச் செயலி மூலம் அழைப்பாணை அனுப்புவது இதுவே முதன்முறையாகும். ஹரியாணா மாநில நிதித் துறை விசாரணை ஆணையத்தின் தலைவராக அசோக் கெம்கா பொறுப்பு வகிக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிரான நிலமோசடிப் புகாரை விசாரித்த அதிகாரியான இவர், தேசிய அளவில் பிரபலமானவராவர்.
  இந்நிலையில், அவரது தலைமையின் கீழ் இயங்கும் நிதித் துறை விசாரணை ஆணையத்துக்கு சொத்துத் தகராறு தொடர்பான வழக்கு ஒன்று வந்தது. அது, மூன்று சகோதரர்களுக்கு இடையேயான பாகப் பிரிவினை விவகாரம் என்பதால், அவர்கள் அனைவரையும் நேரில் ஆஜராகுமாறு அசோக் கெம்கா அறிவுறுத்தியிருந்தார்.
  இந்நிலையில், அவர்களில் ஒரு சகோதரர் நேபாளத் தலைநகர், காத்மாண்டுக்குப் புலம் பெயர்ந்து விட்டதால், அவரது முகவரி கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது தொலைபேசி எண்ணைக் கொண்டு வாட்ஸ் - அப்' செயலி வாயிலாக அழைப்பாணை அனுப்ப அசோக் கெம்கா உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த 6-ஆம் தேதி அவருக்கு வாட்ஸ் - அப்' மூலம் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதுதொடர்பான தகவலும் சம்பந்தப்பட்ட நபருக்குத் தெரிவிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai