சுடச்சுட

    

    ஜம்மு காஷ்மீர் இடைத்தேர்தல்: 6.5 சதவீதம் வாக்குப்பதிவு!

    By DIN  |   Published on : 09th April 2017 07:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nota_vote

    ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 6.5 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியை உள்ளடக்கிய ஸ்ரீநகர், பத்காம் மற்றும் கந்தர்பால் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வன்முறை வெடிக்க துவங்கியது.

    இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது

    கலவரத்தையடுத்து இடைத்தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது. வரலாறு காணாத வகையில், வெறும் 6.5 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகர், பத்காம் மற்றும் கந்தர்பால் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai